Editorial / 2019 நவம்பர் 11 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெட்ரோ சந்தேஸின் சோஷலிச தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எவ்வாறெனினும், தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடைய வொக்ஸ் கட்சியும் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஸ்பெய்னின் அரசியல் நெருக்கடி நிலை நீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவது தனது பலத்தை அதிகரிக்கும் என பிரதமர் பெட்ரோ சந்தேஸ் எதிர்பார்த்தபோதும், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட குறைந்த ஆசனங்களையே அவரது கட்சி பெற்றுள்ளதுடன், அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தேவையான 176 ஆசனங்களிலிருந்து மேலும் பின்தங்கியுள்ளது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 99.9 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் சோஷலிச தொழிலாளர் கட்சி 120 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட மூன்று ஆசனங்கள் குறைவாகும். தவிர, செனட்டில் பெரும்பான்மையையும் அக்கட்சி இழந்துள்ளது.
இதேவேளை, கடந்த தேர்தலில் 24 ஆசனங்களை வென்றிருந்த வொக்ஸ் கட்சி 52 ஆசனங்களை வென்று மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தவிர, கடந்த தேர்தலில் 66 ஆசனங்களை வென்ற பழமைவாத பிரபலக் கட்சி இம்முறை 88 ஆசனங்களை வென்றுள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago