2021 மே 08, சனிக்கிழமை

ஹிலாரி, ட்ரம்பின் வேடிக்கையான பரிசுகள்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான விவாதங்களும் பிரசாரங்களும் உச்ச நிலையை அடைந்துவரும் நிலையில், ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனும் குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பும், வேடிக்கையான பரிசுகளை வழங்கியுள்ளனர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் ஹிலாரி கிளின்டன்,  தனது புத்தகமான 'கடினமான தெரிவுகள்"ஐ அனுப்பியுள்ளார். தனது அடைவுகள் குறித்து அவர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், தனது அடைவுகளை அவர்கள் வாசித்தறிய வேண்டுமென்பதற்காகவே புத்தகங்களை அனுப்பியதாகத் தெரிவித்தார்.

மறுபுறத்தில், தனது சக போட்டியாளரான மார்கோ றூபியோவுக்கு, குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், அவரது பெயர் பொறித்த தண்ணீர்ப் போத்தல்கள், அவரது தேர்தல் சுலோகம் பொறித்த துவாய்கள், 'உங்களுக்கு எப்போதும் வியர்த்துக் கொண்டிருப்பதால், கொஞ்சம் தண்ணீரை உங்களால் பயன்படுத்த முடியுமென நினைத்தோம். மகிழ்வடையுங்கள்" எனக் கூறும் குறிப்பும் அனுப்பப்பட்டுள்ளது.

றூபியோவுக்கு அதிகமான வியர்வை எடுப்பதாக ட்ரம்ப் விமர்சனங்களை கேலியை முன்வைத்திருந்த நிலையிலேயே, இந்த வேடிக்கையான பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X