2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

தென்கொரியாவில் கப்பல் மூழ்கியதால் இருவர் உயிரிழப்பு: 104 பேரை காணவில்லை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்கொரியாவுக்கு அப்பாலான  கடற்பரப்பில்  கப்பலொன்று புதன்கிழமை (16) மூழ்கியதால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தபட்சம் 13 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

476 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த இக்கப்பல் மூழ்கியதால் 104 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்சென் துறைமுகத்திலிருந்து தென் தீவான ஜெயூவுக்கு பயணித்துக்கொண்டிருந்த இக்கப்பலில்;  கூடியளவில் பாடசாலை  மாணவர்களே பயணித்துள்ளனர்.

பாரிய மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக கப்பல்களும் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 180 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். (படங்கள்: ஏ.எப்.பி.)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X