2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஹெய்ட்டியில் கொலரா நோயினால் 138 பலி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய ஹெய்ட்டியில் பரவி வரும் கொலரா நோய் காரணமாக 138 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த கொலரா நோயினால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் சைன்ற் மார்க் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுமார் 1500 பேர் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  வாந்திபேதி, வயிற்றுழைவு மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் காணப்படுவதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையே இந்த தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தண்ணீர் மற்றும் உணவு மூலமே கொலரா பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிடின் உயிரிழக்கக்கூடிய அபாயம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--