Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் தென் பிராந்தியமான வடக்கு ஒஸட்ரியாவில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதலில் 123 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து இன்றைய தினத்தை துக்க தினமாக வடக்கு ஒஸட்ரியா பிரகடனப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு அரசு கட்டிடங்களில் தொங்கவிடப்பட்டுள்ள தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படியும், தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்படும் பொழுதுப் போக்கு நிகழ்ச்சிகளையும் திரையரங்குகளில் ஒளிப்பரப்படும் திரைப்படங்களையும் இன்று இடைநிறுத்தும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 18 மாத வயதான குழந்தை ஒன்றும் இறந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வில்டிகாவ்கஸ் நகரில் உள்ள சந்தைக்கருகில் காரொன்றின் மூலம் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வடக்கு ஒஸட்ரிய குடியரசின் தலைவர் டய்முறாஸ் மம்சுராவ் இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு 40 கிலோகிராம் நிறையடையே குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குண்டானது சந்தைக்கு நுழைவாயிலுள்ள வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து வெடிக்க செய்துள்ளதாகவும் தற்கொலைதாரி காரினுள் அமர்ந்த நிலையில் இருந்து இந்தக் குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்றும் புலனாய்வுத்துரையின் அமைப்பான ரஷ்யன் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ், தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றும் போது இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் அல்லது கொல்லப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
"சாதாரண மக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். இந்த செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எமது சட்டங்களின் கீழ் தகுந்த தண்டனை வழங்குவோம். அவர்கள் எதிர்ப்பு காட்டினால் அவர்களை அழித்துவிடுவோம்" என்று மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரை இனங்கண்டு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் இன்டர்பெக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
8 hours ago