Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூன் 18 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா. செயலாளர் நாயகம்; பதவிக்கு இரண்டாவது தடவையாகவும் பான் கீ மூன் தெரிவு செய்யப்படுவதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாதுகாப்புச் சபையில் வெள்ளிக்கிழமை ஏகமனதாக இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபா மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் பான் கீ மூனை ஆதரிப்பதற்கு தயக்கம் காட்டியதால் அவர் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகுவதற்கான தனது அங்கீகாரத்தை வழங்குவதை ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்றுமுன்தினம் ஒத்திவைத்தது. எனினும் நேற்று வெள்ளிக்கிழமை அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
இதேவேளை ஐ.நா.செயலார் நாயகமாக மீண்டும் பான் கீ மூனின் தெரிவு செய்யப்படுவதை அங்கீகரிப்பதற்கான ஐ.நா. பொதுச் சபை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. 67 வயதான பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago