2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வறுமையில் ஆபிரிக்காவை பின் தள்ளிய இந்தியா

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்கா கண்டத்திலுள்ள 26 ஏழை நாடுகளிலும் பார்க்க இந்தியாவின் 8 மாநிலங்களிலுள்ள மக்களின் வறுமை நிலை தலைதூக்கியுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் யு.என்.டி.பி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட, வறுமையை அளவிடும் எம்.பி.ஐ எனப்படும் முறையிலான ஆய்விலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஆபிரிக்காவிலுள்ள 26 ஏழை நாடுகளைச் சேர்ந்த 410 மில்லியன் பொதுமக்களை விடவும், இந்தியாவிலுள்ள 8 மாநிலங்களைச் சேர்ந்த 421 மில்லியன் மக்கள் வறுமை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ஒரிஸா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களிலேயே இந்த வறுமை நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆய்வறிக்கை மேலும் கூறியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--