2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பு யோசனைக்கு அங்கீகாரம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை  300 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிப்பதற்கான யோசனையை  இந்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

தற்போது  மாத சம்பளமாக 16,000 ரூபாவை   பெற்றுக்கொள்ளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் காலங்களில் 50,000 ரூபாவை பெற்றுக்கொள்ளுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
20,000 ரூபாயிலிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்  அலுவலக மற்றும்  தொகுதிகளுக்கான படிகளை இரண்டு மடங்கால் இந்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்  சம்பளம் போதாது எனக் கூறி வெளிநடப்புச் செய்ததையடுத்து, இந்திய லோக் சபா ஒத்திவைக்கப்படது. 

ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தைப் போன்று, தமது சம்பளத்தையும் 80,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.

இந்த சம்பள அதிகரிப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த விமர்சகர்கள், அரசாங்க தனியார்துறை சம்பளத்தோடு ஒப்பிடுமிடத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் குறைவாகவிருந்தபோதிலும், அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளதாகவும் கூறினர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச விமானசேவைகள், குளிரூட்டி வசதியுடன் முதலாம் வகுப்பு ரயில் சேவை, இலவச தங்குமிட வசதி மற்றும் ஏனைய சலுகைகள் வழங்கப்படுவதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.
 

 


  Comments - 0

  • chairman Sunday, 20 April 2014 05:35 AM

    நாகை வேட்பாளர்கள் பட்டியல்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--