2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

விமானப் பயணப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்குகிறது சீனா

Kogilavani   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altதேசிய ரீதியில் விமானப் பயண பாதுகாப்பு குறித்த சோதனை நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியுள்ளது. அதேவேளை சீன புலனாய்வுத்துறையினர் நேற்றுமுன்தினம்  விமானமொன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை, சீனாவின் வடபிராந்தியத்திலுள்ள யிச்சுன் நகரத்தை அண்மித்த பகுதியில் ஹெனான் எயார்லைன்ஸ் விமானமொன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 42 பேர் பலியானதுடன் 54 பயணிகள் காயமடைந்தனர்.

சீனாவில் 5 வருடங்களின்பின் விமான விபத்தில் அதிக பயணிகள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முக்கிய விமான சேவை நிறுவனங்கள் விமானப் பயணப் பாதுகாப்பு குறித்த கூட்டமொன்றை நேற்று நடத்தின. அதேவேளை, இவ்விமான  விபத்துக்கான காரணத்தைக் கண்டறியுமாறு ஜனாதிபதி ஹியூ ஜிந்தாவோ, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--