2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் பெண்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களின் பின்னர் இராணுவத்தில் முதன் முதலாக 29 பெண்கள் நேற்று சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்தனர்.

  2014 ஆம் ஆண்டில்  வெளிநாட்டு இராணுவத்திடமிருந்து  ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் தேசியப் பாதுகாப்புப் படையினருக்கு உதவுவார்கள் என நம்பப்படுகிறது.

வெளிநாட்டு இராணுவத்தினர் வெளியேறியபின் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்பதற்காக ஜனாதிபதி ஹமீட் கார்சாய் , நேட்டோ மற்றும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் படை மற்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பகுதியினருக்கான பயிற்சிகளை விரிவாக்கும்படி அளுத்தம் கொடுத்துள்ளனர்.

 ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா 2011 ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியேற ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

'எனது ஆப்கானிஸ்தான் சகோதரர்கள் தற்போது இராணுவத்தில் சேவையாற்றி வருவதுபோல் நான் எனது நாட்டை பாதுகாப்பதில் முழுமையாக என்னை அர்ப்பணித்துள்ளேன். அதனால்தான் நான் இராணுவத்தில் இணைந்துக் கொள்ள தீர்மானித்தேன்' என்று பெண் அதிகாரி சரீப் கபுல் படை பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார்.

இப்பயிற்சிகளை மேற்பார்வை செய்த பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டேவிட் பீட்டர்சன் கருத்துத் தெரிவிக்கையில், 'இங்கு வந்திருக்கும் பெண்கள் மிகவும் சிறந்த ஆவல் கொண்டவர் படைவீராங்கனைகள். அவர்கள் இன்று சிறந்த தொழில்சார் ரீதியான செயற்பாடுகளை வெளிப்படுத்தினர்' தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--