Super User / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணுவாயுதத் தாக்குதல்களை ஆரம்பிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்படும் இரகசிய குறீடுகள் அடங்கிய அட்டை பில் கிளிண்டனின் பதவிக் காலத்தில் சில மாதங்கள் காணாமல் போயிருந்ததாக முன்னாள் இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பில் கிளிண்டன் ஜனாதிபதியாக பதவி வகித்த அமெரிக்கக் கூட்டுப்படையதிகாரிகளின் தலைவராக விளங்கிய ஜெனரல் ஹக் ஷெல்டன் எழுதிய நூல் வெளியிடப்பட்டுள்ளது. 'வித்தவுட் ஹெசிடேஷன்' என்ற தலைப்பிலான அந்நூலின் மூலமே இவ்விடயம் அம்பலமாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன.
2000 ஆம் ஆண்டில் இச்சம்பவம் நடைபெற்றதாக ஷெல்டன் தெரிவித்துள்ளார்.
அணுவாயுதங்ளை ஏவுவதற்கான இரகசிய குறியீட்டுகள் அடங்கிய பெட்டி அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கப்படும். எவ்வேளையிலும் ஜனாதிபதிக்கு அருகிலுள்ள இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவரிடம் அந்த பெட்டி இருக்கும்.
புட்போல் என அழைக்கப்படும் அந்த பெட்டியைத் திறப்பதற்கும் இரகசிய குறியீடுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான குறியீடுகள் அட்டையொன்றில் பொறிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படும். 'பிஸ்கட்' என அழைக்கப்படும் அந்த அட்டையே கிளிண்டனின் பதவிக்காலத்தில் காணாமல் போனதாக ஜெனரல் ஷெல்டன் தெரிவித்துள்ளார்.

இந்த அட்டை 4 மாதங்களுக்கு ஒரு தடவை மாற்றப்படும். இரு தடவைகள் இந்த அட்டையை மாற்ற முடியாது என வெள்ளை மாளிகையால் இராணுவத்திற்குத் தெரிவிக்கப்பட்டதாக ஷெல்டன் கூறியுள்ளார்.
ஒரு தடவை ஜனாதிபதியிடம் அந்த அட்டை இருப்தாகவும் மீட்டிங்கில் உள்ள அவருக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது எனவும் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அந்த அட்டை சில மாதங்கள் காணாமல் போயிருந்ததாக வெள்ளை மாளிகை உதவியாளர் ஒருவர் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அணுவாயுத குறியீட்டு அட்டை காணமல் போவது பாரிய தவறாகும் என ஷெல்டன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் விமானப்படை அதிகாரி பீட்டர்ஸன் 2003 ஆம் ஆண்டில் எழுதிய நூலொன்றில் 1998 ஆம் ஆண்டில் கிளிண்டனின் பதவிக்காலத்தில் அணுவாயுதக் குறியீட்டு அட்டை காணாமல் போயிருந்ததாக கூறிருந்தார். ஜெனரல் ஷெல்டன் குறிப்பிடுவதும் அதே சம்பவமா இல்லையா என்பது தெரியவில்லை. எவ்வாறாயினும் அக்காலப்பகுதியில்தான் வெள்ளை மாளிகை ஊழியரான மோனிகா லெவன்ஸிகியுடனான பாலியல் உறவு குறித்த சர்ச்சைககளில் கிளிண்டன் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
16 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
29 minute ago