2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

கொங்கோவில் இராணுவத் தளபதி தலைமையில் பெரும் எண்ணிக்கையான வல்லுறவுகள்

Super User   / 2011 ஜனவரி 19 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பிராந்தியத்தில் 50 இற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு அந்நாட்டின் கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதி தலைமை வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிஸி எனும் நகரத்தில் ஜனவரி முதலாம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வன்முறைக்கு கட்டளையிட்டவர் லெப். கேணல் கிபிபி முட்வரே எனும் இத்தளபதியே என பாதிக்கப்பட்;ட பெண்ணொருவர் அடையாளம் கண்டுள்ளார்.
கிபிபியும் அவரின் மெய்பாதுகாவலர்கள் நால்வரும் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

கொங்கோவில் உள்நாட்டு மோதல்களுக்கு மத்தியில் பெரும் எண்ணிக்கையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக புகாரிடப்பட்டுள்ளது. எனினும் இராணுவம் சம்பந்தப்பட்டு, அதிக எண்ணிக்கையான பெண்கள் வல்லுறவுக்குள்ளான மிகப்பெரிய சம்பவம் இது எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மேற்படி குற்றச்சாட்டுகளை லெப். கேணல் கிபிபி நிராகரித்துள்ளார். பிஸி நகரை முற்றுகையிட்ட சிப்பாய்கள் கட்டளைகளை மீறியதாக அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பிஸி நகர வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பாயிஸ் சசா கூறுகையில், 'வைத்தியசாலைக்கு அருகில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். அதனால் அச்சம் ஏற்பட்டு நோயாளிகள் அனைவரும் தப்பியோடினர். நாம் அடுத்தநாள் அதிகாலை 5 மணியளவில் திரும்பி வந்தபோது கத்தித்துக்குள்ளானவர்கள் மற்றும் வல்லுறவுக்குள்ளான பெண்கள் சிகிச்சைக்கு வரத் தொடங்கினர்.;' என்றார்.

டாக்டர் சச்சாவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரும் இதுவரை வல்லுறவுக்குள்ளான 51 பெண்களுக்கு சிகிச்சையளித்துள்ளனர்.
 


  Comments - 0

 • xlntgson Thursday, 20 January 2011 09:09 PM

  ஆப்பிரிக்காவில் இது சர்வ சாதாரணம்!
  பொய் குற்றச்சாட்டுகளும் கூட நிரம்ப உண்டு!
  பெண்கள் ஆண்களை கற்பழிக்கும் நாடுகள் அல்லவா இவை!
  மேற்கின் ஊடகங்கள் இவற்றை சித்தரிப்பதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--