Super User / 2011 ஜனவரி 22 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றமளிப்பதாக சர்வதேச நாடுகளின் குழுவொன்று தெரிவித்துள்ளது.
ஈரானிய பிரதிநிதிகளுடன் துருக்கியில் இரு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்தையில் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பிரிட்டனைச் சேர்ந்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதி பரோனஸ் அஸ்டன் மேற்படி வெளிநாடுகளின் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
இப்பேச்சுவார்தையில் ஈரான் முன் நிபந்தனைகளுடன் பங்குபற்றியதாக அவர் குற்றம் சுமத்தினார். அதேவேளை பேச்சுவார்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், ஈரானிய அணுசக்தி திட்டங்கள் குறித்த கரிசனைகளை எதிர்கொள்வதற்கான இராஜதந்திர வழிமுறைகள் நீடிப்பதாக அமெரிக்கா நம்புகிறது எனக் கூறியுள்ளார்.
இதேவேளை ஈரானிய பேச்சுவார்தைக் குழுவின் தலைவர் சயீட் ஜலீல் கருத்துத் தெரிவிக்கையில் ஈரான் முன் நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லை என்று கூறினார்.
ஆனால், எந்தவொரு தீர்வும் ஈரானிய அணுசக்தி தொழில்நுட்ப உரிமை உட்பட நாடுகளின் உரிமைகளை மதிப்பதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் குறிப்பிடப்படவில்லை எனவும் அடுத்த தெரிவு ஈரானின் கையிலேயே உள்ளது எனவும் பரோனஸ் அஸ்டன் கூறியுள்ளார்.
24 minute ago
30 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
36 minute ago
2 hours ago