Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இன்று சனிக்கிழமை ஆயிரகணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள பேர்ள் சதுக்கம் எனும் முக்கிய பகுதியை இன்று அடைந்தனர்.
ஆர்ப்பாட்டக்கார்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 60 பேர் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் பொலிஸார் அங்கிருந்து அகன்ற பின்னர் ஆர்ப்பாட்டக்கார்கள் உற்சாக கோஷங்களுடன் பேர்கள் சதுக்கத்திற்கு திரும்பி வந்தனர்.
பஹ்ரெய்னின் முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலீபா, எதிர்க்கட்சிகளை பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுத்தள்ளார். தற்போது அமைதியை பின்பற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பேச்சுவார்த்தைக்கு முன்பாக வீதிகளிலிருந்து படைகளை வெளியேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில் படைகளை வீதிகளிலிருந்து வெளியேறுமாறு இளவரசர் கலீபா உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
717 சதுரகிலோமீற்றர் பரப்பளவு கொண்ட சிறிய நாடான பஹ்ரெய்னில் 8 லட்சம் மக்கள் உள்ளனர். 61 வயதான மன்னர் ஹமாட் 1999 ஆம் ஆண்டிலிருந்து பதவியிலிருந்து வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
6 hours ago
8 hours ago