Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 02 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஷஹ்பாஸ் பாத்தி இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் பட்டப்பகலில் அமைச்சர் பாத்தியின் காரை வழிமறித்து துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக்கொன்றனர்.
42 வயதான ஷஹ்பாஸ் பாத்தி ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவராவார்.
பாகிஸ்தானின் தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஒரேயொரு கிறிஸ்தவர் இவர் .
அவர் தனது தயாரின் வீட்டிலிருந்து அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்றபோது அவரின் மெய் பாதுகாவலர்கள் எவரும் அங்கிருக்கவில்லை என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர்தெரிவித்தார்.
பொலிஸாரும் பரா இராணுவ படையினரும் அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த போதிலும் இப்பயணதின்போது தன்னுடன் அவர்களை வரவேண்டாம் என அவர் கூறியிருந்ததாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
10 minute ago
28 minute ago
35 minute ago
xlntgson Thursday, 03 March 2011 08:46 PM
சோகம்! சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிப்பது பெரும்பான்மையினரின் கடமை, ஒரு நாட்டில் சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்படாவிட்டால் அந்நாடு தனிமைப்படுகிறது என்று பொருள்.
இந்தியாவில் சிறுபான்மையினரை தாக்கிவிட்டு இப்போது பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகள் பிளவுபட்டு அதில் முஸ்லிம்களுக்கு அனுசரணையான பிரிவு உபி யில் ஆட்சியைப் பிடித்திருப்பதைக் காணலாம். சிறுபான்மையை கொல்வது பெரிய விடயம் அல்ல. பெரும்பான்மைக்கு அது கோழைத்தனம் ஆகும்.
எந்த நாட்டிலும் சிறுபான்மையினர் பற்றிய சந்தேகங்கள் அளவுக்கதிகம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago
35 minute ago