Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
டியூனிசியா ஜனாதிபதி சியனலாப்தீன் பென் அலி பதவி கவிழ்க்கப்பட்டதையடுத்து, அங்கு புதிதாக தேர்தலொன்றை நடத்துவதற்கான விபரங்களை டூனிசியாவின் இடைக்கால ஜனாதிபதி புவாட் மெபாஸா அறிவித்துள்ளார்.
டியூனிசியாவில் அரசியல் யாப்பு கவுன்ஸிலின் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் ஜுலை மாதம் 24 நடைபெறுமென புவாட் மெபாஸா தெரிவித்தார். இருப்பினும் டூனிசியாவில் புதிதாக தேர்தலொன்று நடைபெறும் வரை இடைக்கால ஜனாதிபதியாக தான் பதவியிலிருக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
இடைக்கால ஜனாதிபதியொருவர் 60 நாட்கள் மாத்திரமே ஆட்சியிலிருக்க முடியுமென தற்போதைய அரசியல் யாப்புத் தெரிவித்தாலும் கூட, தான் தேர்தல் முடிவடையும் வரை தொடர்ந்து ஆட்சியிலிருக்கப் போவதாகவும் புவாட் மெபாஸா குறிப்பிட்டார்.
1 hours ago
3 hours ago
b.m.imran Wednesday, 26 October 2011 01:21 AM
இவன் அழகானவன் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago