Super User / 2011 ஜூன் 09 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபிய அதிபர் கேணல் முவம்மர் கடாபி, தனக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களை அச்சம்கொள்ள வைப்பதற்காக பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லிபிய அரசாங்கப் படையினர் சில நகரங்களில் பெரும் எண்ணிக்கையான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் இதற்காக படையினருக்கு கேணல் கடாபி வயாகரா விநியோகித்ததாக கூறப்படுவதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம வழக்குத் தொடுநரான லூயிஸ் மொரினோ ஒகாம்போ கூறியுள்ளார்.
'சில இடங்களில் 100 பேர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு;ள்ளனர். லிபியாவில் வல்லுறவு ஒரு கொள்கையாக இருந்ததை இப்போது நாம் உறுதிப்படுத்த முடியும். வல்லுறவு அவரின் அடக்குமுறையின் ஒரு அம்சமாக இருந்தது' என ஒகாம்போ தெரிவித்துள்ளார்.
பாலியல் வல்லுறவை தூண்டுவதற்காக பாலியல் மருந்துகள் அடங்கிய கொள்கலன்களை லிபிய அரசாங்கம் வாங்கியதாக சாட்சியாளர்கள் கூறுவதாக மொரினோ ஒகாம்போ மேலும் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரங்களை தான் தேடிவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டு குறித்து லிபிய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை.
04 Jan 2026
04 Jan 2026
IBNU ABOO Saturday, 11 June 2011 09:26 PM
எங்கள் நாட்டவர் இந்த விசயத்தில் பிறவிலேயே பாலியல் ஊட்டச்சக்தியுடந்தான் உள்ளனர் .இப்போ இவர்களுக்கு தேவையான மருந்து இந்த மன்மத உணர்வை குறைக்கப்பன்னுவது. ஏனென்றால் எங்கும் ரேப் செய்திதான் .
Reply : 0 0
VOYAKARA Tuesday, 14 June 2011 08:30 AM
கடாபி ரேகிம் மட்டும் தானா ? அவர் நண்பர் ரேகிம் எப்படி ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026