2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

திமுக ஷோ முடிந்தது: இலவச கலர் ரீ.வி. திட்டம் ரத்து

Super User   / 2011 ஜூன் 10 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்திய இலவச வர்ண தொலைக்காட்சிப்  பெட்டிகள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை ரத்துச்செய்துள்ளது.  

தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, மக்களுக்கு இலவச வர்ண தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும் என அறிவித்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 5 வருடகாலத்தில் சுமார்  1.6 கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை  வழங்கியுள்ளது. இதற்காக 3600 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டிருந்தது.

எனினும்  மக்கள் கேபிள் ரீ.வி. இணைப்பு மூலம்சுhமர் 4000 கோடி ரூபாவை வருடாந்தம் செலவிட்டுள்ளதாக ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

இலவச கலர் ரி.வி. திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை எனவும் சிலர் காரில் வந்து இவற்றை வாங்கிச் சென்றனர்  எனவும் ஜெயலலிதா கூறினார்.

 சுமங்கலி கேபிள் விஷன் உரிமையாளர்களான கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மற்றும் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி ஆகியோரின் கட்டுப்பாட்டில் தமிழக கேபிள் தொலைக்காட்சித்துறை உள்ளது. ஏற்கெனவே கேபிள் தொலைக்காட்சித் துறை அரசுடைமையாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இலவச தொலைக்காட்சித் திட்டத்தின் 6 ஆவது கட்டத்தில் விநியோகிப்பதற்காக 7 லட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகளை வாங்கும் உத்தரவுகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜெயலலிதா கூறினார். 

அதேவேளை, ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ள ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள் அநாதை இல்லங்கள் முதலானவற்றுக்கு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
 


  Comments - 0

 • xlntgson Saturday, 11 June 2011 11:54 PM

  சமச்சீர் கல்வி திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு நீதி மன்று உத்தரவிட்டிருக்கிறது. அதே போல் யாரேனும் இப்போது இருக்கும் வண்ண தொலைக்காட்சிப்பெட்டிகளை தங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளலாம்! நீதிமன்றங்கள் இப்போது கால தாமதமில்லாமல் செயல்படுகின்றன என்று தெரிகிறது. வாங்கிய பெட்டிகளை என்ன செய்ய? இனிமேல் எதையும் இலவசமாக கொடுப்பதை விட நியாய விலைக்கு கொடுப்பதையும் அதில் ஊழல் புகுந்து விடாமல் பார்த்துக்கொள்வதும் போதும். ஆனால் மக்கள் இலவச புத்திக்கு அடிமையாகாமல் இருந்தால் மட்டுமே இயலும்.

  Reply : 0       0

  IBNU ABOO Saturday, 11 June 2011 03:18 AM

  தோற்றவர்களை வென்றவர்கள் பழிவாங்குவதும் இழிவுபடுத்துவதும் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதும் கட்சிகுரோத நடவடிக்கையே தவிர மக்கள்நலன் பேணும் காரியமல்ல .தமிழக சாக்கடை அரசியலின் பாரம்பரியம் இது. இதைதான் அடுத்தமுறை திமுக செய்யப்போகிறது

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X