2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

லக்ஷர் ஈ ஜான்வி தலைவர் வீட்டுக்காவலில்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதலை திட்டமிட்டவர் எனக் கூறப்படும் லக்ஷர் ஈ ஜான்வி அமைப்பின் தலைவர் மாலிக் இஷாக் இன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

மாலிக் இஷாக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. எனினும் இவர் அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடியவர் என கருதப்படுவதால் இவரை 10 நாட்கள் வீட்டுக்காவலில் வைக்கும்படி பஞ்சாப் மாநில அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது.

தடைசெய்யப்பட்ட லக்ஷர் ஈ ஜான்வி அமைப்பு பலுசிஸ்தான் மாநிலத்தில் 29 ஷியா சிறுபான்மையினரின் படுகொலைக்கு தானே பொறுப்பு என அறிவித்தததையடுத்து இவரை காவலில் வைக்கும்படி பஞ்சாப் மாநில அரசு கட்டளை பிறப்பித்தது.

மாசிக் இஷாக் இஸ்லாமின் பெயரில் வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டும் பேச்சுக்களை ஆற்றிவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 70 ஷியா பொதுமக்களை கொலை செய்ததாகவும் இவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .