2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சவூதி உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்க அனுமதி

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபிய உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்  என அந்நாட்டு மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார். ஆலோசனை வழங்கும் சூறா கவுன்ஸிலில் அங்கத்தவர்களாகவும் நியமிக்கப்படுவர் எனவும் அவர் அறிவித்தார்.

"ஷரிஆ சட்டத்திற்குட்டபடளவில், பெண்களை ஒதுக்குவதற்கு நாம் மறுக்கிறோம் என்பதால் எமது சிரேஷ்ட உலமாக்களுடன் கலந்துரையாடியதையடுத்து அடுத்த தடவையிலிருந்து சூறா கவுன்ஸிலில்  பெண்களையும் உள்ளடக்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்" என 87 வயதான மன்னர் அப்துல்லா அறிவித்தார்.

"மாநாகராட்சித் தேர்தல்களில் பெண்கள் போட்டியிடுவதற்கும் வாக்களிப்பதற்கும் உரிமையை கொண்டிருப்பார்கள்" என அவர் கூறினார்.

சுவூதி அரேபியாவின் இத்தீர்மானத்தை அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன.

சவூதி எழுத்தாளர் நிமாஹ் இஸ்மாயில் நவாப் இது தொடர்பாக பிபிசியிடம் கூறுகையில், இது நாம்  இதற்காக மிக நீண்டகாலமாக காத்திருந்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் செலுத்தும் உரிமை, வாக்குரிமை போன்றவற்றுக்காக செயற்பாட்டாளர்கள் சுமார் 20 வருடங்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்' என அவர் கூறினார்.

வஜேஹா அல் ஹுவைடர் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் இது ஒரு 'சிறந்த செய்தி' எனத் தெரிவித்தார்.

'இப்போது வாகனம் செலுத்துவதற்கான தடை மற்றும் ஆண்களின் துணையின்றி பெண்கள் சாதாரண வாழ்க்கையை மேற்கொள்வதற்கான தடை என்பனவற்றை நீக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • s.f Saturday, 01 October 2011 02:22 PM

    kuruwezetku ondumillei, marumailakku thuuramum illai. ezenai wilangum mattum ungaluku pawamumillai. sile pengalal weetu nirwahaththeiye parke mudiyama vivaharatthule poi nikkuranga, azukkulle, naattu nirwaham weareya? ezu enga poi nikkumo allah than arivan.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .