Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜூலை 08 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக மொஹமட் சரிபு அப்துல் வாசித், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியலின் ஊடாக பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் பதவிவிலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எம்.எஸ் அப்துல் வாசித் அவ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஜூலை 3 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு அமைய பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
2000ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த அவர் 2006ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார். இதன் பின்னர் 2011 மற்றும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று பொத்துவில் பிரதேச சபையின் தலைவராகக் கடமையாற்றினார். அத்துடன், 2020 மற்றும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
1 hours ago