2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

பின்லேடன் கொலை: சி.ஐ.ஏ. மருத்துவர் மீது தேசத்துரோகி குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அல்கய்டா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடர்பான விசாரணை செய்யும் பாகிஸ்தானிய ஆணைக்குழுவொன்று அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு உதவியதாகக் கூறப்படும் வைத்தியரை தேசத்துரோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்  விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.

ஒசாமா பின்லேடன் குறித்த இடத்தில் உள்ளாராவெனத் தீர்மானிக்க உதவும் வகையில் மரபணு  (டி.என்.ஏ.) மாதிரிகளை பெறுவதற்காக அபோதாபாத் என்னும் இடத்தில் சி.ஐ.ஏ. ஏற்பாடு செய்த போலி தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டத்தை நடத்தியதாக டாக்டர் ஷகீல் அவ்ப்ரிடி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அல்கய்டா தலைவரான ஒசாமா பின்லேடன் அமெரிக்க திடீர்ப்பாய்ச்சல் குழுவால் மே மாதம் இரண்டாம் திகதி கொல்லப்பட்ட சில நாட்களின் பின்னர் இவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த ஆணைக்குழு பல உளவு அதிகாரிகளை விசாரித்து வருகின்றது. கடந்த புதன்கிழமை இக்குழு பின்லேடனின் குடும்பத்தை விசாரணை செய்தது.

அமெரிக்காவின் விசேட படையணியின் இரகசியத் தாக்குதலை அதன் இறைமையை மீறிய செயலென்பதால் பாகிஸ்தான் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்கா எவரும் அறியாத வகையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது எவ்வாறு என ஆராய்வதற்காக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தலைமையில் பாகிஸ்தான் விசாரணைக்குழுவொன்றை அமைத்துள்ளது.

ஓர் இராணுவ நகரமான அபோதாபாத்தில் பல வருடங்களாக ஒளிந்து வாழ எப்படி ஒசாமா பின்லேடனால் முடிந்ததென்பதையும் இந்த ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது. 


  Comments - 0

 • xlntgson Sunday, 09 October 2011 08:13 PM

  அமெரிக்கா தீவிரவாதம் என்று கூறி ஆதரிப்பதைத் தான் பின்னர் பயங்கரவாதம் என்று கூறும், தாலிபான் ஒசாமா சத்தாம் ஹுசைன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்!

  Reply : 0       0

  asker Saturday, 08 October 2011 08:20 PM

  தீவிரவாதம் ஒழிந்தது மகிழ்ச்சியே ; ஆனால் அமெரிக்கா எனும் தீவிரவாதம் ஒழியவே வேண்டும்.

  Reply : 0       0

  zamroodh Monday, 10 October 2011 11:38 PM

  இவர்களை தீவிரவாதிகளாக மாற்றியது அமெரிக்க இஸ்ரேல் தீவிரவாதிகள் என்பதை யாரும் மறுக்கக்கூடாது. உலகம் முழுக்க உள்ள எல்லாவகையான தீவிரவாதிகளுக்கும் இந்த இரு தீவிரவாதிகளும்தான் அடிப்படை என்பதை எல்லோரும் புரிந்துகொண்டால் நல்லது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--