2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பாங்கொக்கில் வெள்ள அபாயம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்தின் வடபகுதி வெள்ளத்தில் மூழ்கி வரும் நிலையில் தலைநகரை வெள்ள அபாயத்திலிருந்து  பாதுகாப்பது சாத்தியமற்றதென அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாங்கொக்கின் சில பகுதிகள்  வழியாக வெள்ளநீர் கடலுக்குச் செல்வதற்கு வழிவிட வேண்டுமென தாய்லாந்துப் பிரதமர் யிங்லுக் சினவத்ரா தெரிவித்துள்ளார்.

வெள்ள அபாயம் தேசிய நெருக்கடியாகவுள்ளது. இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

பாங்கொக்கில் ஏழு மாவட்டங்களிலுள்ள மக்கள் வெள்ள அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு நேற்று புதன்கிழமை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X