2025 ஜூலை 12, சனிக்கிழமை

கால்வாய்க் குழியிலிருந்து பிடிக்கப்பட்ட கடாபி 'சுட வேண்டாம்' என மன்றாடினார்

Super User   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர் கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர் கால்வாய்க் குழியொன்றிலிருந்து தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் பிடிக்கப்பட்டதாகவும் தன்னை சுட வேண்டாம் என அவர் மன்றாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பினன்ர்  அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

கால்வாய்க் குழியொன்றிலிருந்து கேணல் கடாபி கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டபோது அவர் இராணுவ பாணி ஆடை அணிந்திருந்தார். பிக் வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கேணல் கடாபி பின்னர் ஓரிடத்தில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்படும் காட்சிகளை லிபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

தன்னை சுட்டுவிட வேண்டாம் என கடாபி கோரியதாகவும் கிளர்ச்சிப் படை வீரர் ஒருவரிடம் ' நான் உங்களுக்கு என்ன செய்தேன்' எனக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அவரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் தலையிலும் வயிற்றிலும் சுடப்பட்டார். அவரின் சடலத்தை கிளரச்சிப்படையினர் இழுத்துச் செல்லும் காட்சியை அல் ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பின்னர் அவரின் சடலும் அம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றப்பட்டது.

1942.06.07 ஆம் திகதி பிறந்த முவம்மர் கடாபி 1969  ஆம் ஆண்டு தனது 27 ஆவது வயதில் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். . தனது 42 வருடகால ஆட்சிப்பிடியை  நேட்டோ ஆதரவுடனான கிளர்ச்சிப்படையினரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம்  அவர் இழந்தார். தனது  69 ஆவது வயதில் அவர் நேற்று வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.



You May Also Like

  Comments - 0

  • manithan Friday, 21 October 2011 10:08 PM

    இங்கு ஒருவர் பசர் அல்-அஸாத் முஸ்லிமெனக் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது. பசர் அல்-அஸாத் ஒரு முஸ்லிமேயல்ல. அவர் சிரியாவில் மட்டுமே இருக்கும் "அலவிய்யா" என்று அழைக்கப்படும் மதத்தைச் சேர்ந்தவர்.

    Reply : 0       0

    safa Monday, 24 October 2011 05:36 PM

    solvathellam sarithan... but punishment kodukka intha American yaaru????? who is American to punish this kind of sins??? bloody.

    Reply : 0       0

    mtmsiyath Monday, 24 October 2011 03:10 AM

    கடாபியை மரியாதையாக நடத்தியிருக்கலாம்.

    Reply : 0       0

    Fouzul Ameer-Abdul Rasheed. Sunday, 23 October 2011 06:36 AM

    அடி பணியாத தலைவர்களை தனது நரி மூளையை பயன்படுத்தி கிளர்ச்சிக்கார்களை தூண்டி விட்டு அவர்களுக்கு தேவையான ஆயுதம் மற்றும் பணம் என்னும் வசதிகளை ஊட்டி நேட்டோ என்னும் இரத்த கட்டேரிகளை நுழைத்து மனித உயிர்களை உண்டு புசிக்கும் நாடுகளுக்குப் பெயர் வல்லரசு. ஏன் தானோ புத்திகெட்ட மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை. ஊட்டப்பட்ட விஷம் செயல் படும்வேளை தான் புத்தி தெளிவாகும்.

    Reply : 0       0

    Abu Chucki Sunday, 23 October 2011 04:29 AM

    இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;
    -அல் குரான்-

    Reply : 0       0

    Raheem Saturday, 22 October 2011 02:17 PM

    Gaddafi யார் என்று தெரியாதவர்களுக்கு அவரைப்பற்றி ஒரு சில விடயங்களை மட்டும் சொல்கிறேன் :
    நோன்பு பற்றி அவர் சொன்னார் : ஒவ்வொரு நாளும் நோன்பு என்பது வேதனை ; நஷ்டம் ; வெறுப்பு . ஹஜ் என்பது மட்டரகமான வணக்கம். கஃபா என்பது இன்றும் நிலைத்திருக்கும் ஒரு சிலை.!!: மிஹ்ராஜ் என்பது ஒரு கற்பனை கதை. ஹிஜாப் என்பது பெண்ணின் உரிமையை மறுப்பது. மேலும் புனித குரானை விட அவர் எழுதிய கிரீன் புக்ke மேல் என அவர் பிரகடனம் செய்து யாப்பாகவும் ஆக்கினார். இவை ஒரு சில மட்டுமே. இதற்கான அல்லாவின் தண்டனை இது.!

    Reply : 0       0

    Azwar Saturday, 22 October 2011 05:57 AM

    யாருக்கும் யாரையும் கொலை செய்ய உரிமை இல்லை. அல்லா கடும் கோபம் அடைகிறான். கடாபியை சட்டம் முன் நிறுத்திருக்க வேண்டும்.

    Reply : 0       0

    Akkaraipattu Saturday, 22 October 2011 05:37 AM

    அமெரிக்கன் ர புத்திய தெரியாது அரபியனுக்கு ........, பாவம் அரபியன் இன்னமும் வெகுளியாகவே இருக்கிறான் .......

    Reply : 0       0

    kaandee Saturday, 22 October 2011 02:46 AM

    இலங்கையில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது அமெரிக்க அரசு விழும் தலைகளை எண்ணிக்கொண்டு மட்டும் தான் இருந்தது ........ஏனெனில் இலங்கை மண்ணை தோண்டினால் வெறும் தண்ணீர் தான் வரும் ......
    இது தெரியாமல் லிபியர்களும் தமக்கு தாமே குழி வெட்டியுள்ளார்கள் ....
    அவர்கள் வெற்றி களிப்பில் வானை நோக்கி வைக்கும் வேட்டுகள் யாவும் இன்னும் சிறிது காலத்தில் அவர்கள் தலை எழுத்தை மாற்றி எழுத அசுர வேகத்தில் திரும்பி வரும் .......
    அப்பொழுது அவர்களை காப்பாற்ற இன்னொரு கடாபி வரமாட்டார் ....!

    Reply : 0       0

    kaandee Saturday, 22 October 2011 02:38 AM

    அடிமட்டதில் இருந்த லிபியாவை உலக தரத்துக்கு உயர்த்திய தலைவனை அந்தநாட்டு மக்களே அடித்து உதைப்பதை பார்க்க வேதனையாக உள்ளது...!
    கடாபியை சுட்டவர்கள் அருந்தும் நீரை கூட சாதாரண மக்களுக்கு கிடைக்க செய்தவர் கடாபியே.......கடாபி செய்த மாபெரும் தவறு பெற்றோலிய வளத்தை மக்கள் மய படுத்தியது தான் ........கடாபி ஆயிரம் அமெரிக்கர்களை கொன்றிருந்தாலும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மன்னித்திருபார்கள். ...............அமெரிக்காவுக்கு அடிபணியாத இஸ்லாமிய நாடுகள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

    Reply : 0       0

    ala Friday, 21 October 2011 10:44 PM

    சாதாரணமான பொது மக்களின் ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தவர்களுக்கு ஆயுதம் ஏந்தி போராடும் திறமை எப்படி இந்த குறுகிய காலத்தில் வந்தது? இது ஓட்டு மொத்த முஸ்லிம் நாடுகளில் பெயர்பெற்று வாழும் தலைவர்களை அழித்து முஸ்லிம் நாடுகளை சீர்குலைக்கும் செயல் தொடர்கிறது. அதில் சதாம் ஹுசைன் இப்போது கடாபி அடுத்து ஏமன் தலைவரா?? சிரிய தலைவரா?? தொடரும் இந்த நடவடிக்கைக்கு முடிவுதான் என்ன?? இதில் எகிப்திய தலைவர் தப்பி விட்டார் ...இருந்தாலும் இது கண்டிக்க தக்க விடயம்.

    Reply : 0       0

    aj Friday, 21 October 2011 10:38 PM

    GAME OVER. NEXT ******* FREE LIBYA. CONGRATS NTC

    Reply : 0       0

    R.F.Maria Dineshan-Jaffna Friday, 21 October 2011 11:11 AM

    சதாம் உசைன் , பின் லேடன் வரிசையில் அடுத்த நபர் ....

    Reply : 0       0

    sahabdeen Friday, 21 October 2011 09:40 PM

    ஏன் இஸ்லாத்தையும் அரசியல்வாதிகளையும் இணைக்கிரிர்கள் ??? இஸ்லாம் ஒரு புனிதமான மதம். அரசியல்வாதிகள் பொய்யை தவிர வேறேதும் தெரியாதவர்கள்.

    Reply : 0       0

    Rikas Friday, 21 October 2011 09:12 PM

    எவர்கள் தங்கள் சிலைகளை இறைவனை மறந்து தான் பெரியவன் என்று கம்பீரமாக அந்த நாட்டில் வைத்தார்களோ (ஒசாமாவை தவிர) அவர்கள் எல்லோருக்கும் இப்படிதான் அழிகின்றார்கள். அல்லாஹ் மிகப்பெரியவன்.....

    Reply : 0       0

    manithan Friday, 21 October 2011 08:09 PM

    அடுத்து பசர் ஆல் ஆசாத், கடைசியாக அகமத் நஜாதி..... இஸ்லாமிய தன்னம்பிக்கையாளர்களை குறிவைத்துக் கொள்ளும் கூட்டத்திற்கு நம்மவர்களே துணை போவது வருத்தமாக உள்ளது. அல்லாஹ் போதுமானவன்.

    Reply : 0       0

    Rauf Friday, 21 October 2011 07:20 PM

    எதிர்காலத்தில் இவர்களின் வாழ்கை கடாபியின் ஆட்சியை விட மோசமான நிலைக்கு வரும் என்பது உறுதி. காபிர்களை நம்பி அதுவும் அமேரியா காபிர்களை நம்பி யாரும் உருபட்டதாக சரித்திரமே இல்லை.

    Reply : 0       0

    manithan Friday, 21 October 2011 07:17 PM

    கதாபி ஒரு சிறந்த மனிதராக இருந்தார் என்றும் ஒரு போதும் நியாயமற்று நடக்கவில்லை என்றும் அவரிடம் சொந்த விமானியாக ஏழு ஆண்டுகள் பணியாற்றிய இந்தோனேசிய விமானி ஆத்மஜா இன்று நேர்காணலில் தெரிவித்தார். அநியாயமாக எந்த ஒரு உயிரையும் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. அவர்கள் அதற்குப் பதிலளித்தேயாக வேண்டும்.

    Reply : 0       0

    sakeena Friday, 21 October 2011 06:45 PM

    அராஜக ஆட்சியாளர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்..

    Reply : 0       0

    Nattan Friday, 21 October 2011 06:16 PM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    ashraff Friday, 21 October 2011 05:15 PM

    allah aniyayakarar kalai ippadithan varalatril alithan. ithu ulahil thodarnthum seyadpadum vithiyahum.

    Reply : 0       0

    pasha Friday, 21 October 2011 02:32 PM

    எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை உணர்த்தும் இறைவனின் மற்றும் ஒரு செயல் இது. ஆட்சியில் இருக்கும் வரை எவ்வளவு ஆடம்பர படாப வாழ்க்கை வாழ்ந்தார். முடிவு எப்படி அமைந்தது எல்லோருக்கும் மற்றொரு படிப்பினை.

    Reply : 0       0

    ziyan Friday, 21 October 2011 02:02 PM

    அமெரிக்கனை விட மோசமானவர்கள் இந்த லிபியர்கள்...தம் மேல் தாமே காறித் துப்பிக்கொண்டார்கள் ..ஒரு மரணித்த உடலை காலால் உதைத்த இந்த வெறியர்களின் நாடு சின்னபின்னமாவப்போவது உறுதி......அல்லாஹு அக்பர் ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .