2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மத்திய கிழக்கின் இரும்புப்பிடி ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் ஓர் எச்சரிக்கை: ஒபாமா

Super User   / 2011 ஒக்டோபர் 21 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேணல் முவம்மர் கடாபியின் மரணம் மத்திய கிழக்கிலுள்ள இரும்புப்பிடி ஆட்சியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.

இம்மரணமானது 'இப்போது ஜனநாயக லிபியாவில் தமது சொந்த தலைவிதியை நிர்ணயித்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபிய மக்களின் நீண்ட, வலிமிகுந்த அத்தியாயமொன்றின் முடிவாகும்' என ஒபாமா கூறினர்.

அதேவேளை மத்திய கிழக்கிலுள்ள எதேச்சதிகார ஆட்சியாளர்களுக்கு, இரும்புப் பிடி ஆட்சி முடிவுக்கு வருவதை தவிர்க்க முடியாது எனும் ஓர் எச்சரிக்கையுமாகும் என அவர் கூறியுள்ளார்.

'நேட்டோவில் எமது தலைமைத்துவம் எமது கூட்டணிக்குஉதவியது. அமெரிக்க படைவீரர் ஒருவரைக்கூட தரையில் இறக்காமல் நாம் எமது நோக்கத்தை அடைந்துள்ளோம். எமது நேட்டோ நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரும்' என பராக் ஒபாமா அறிவித்தார்.
 


  Comments - 0

 • mfmifham Saturday, 22 October 2011 08:47 PM

  பராக் ஒபாமா சொல்றாரு இரும்பு புடி ஆட்சி ஆட்சியாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று சொல்றாரு. அது யாருக்கு என்று தெரிகிறதா? ஈரானுக்கு!

  Reply : 0       0

  mohamed ifham Saturday, 22 October 2011 08:48 PM

  பராக் ஒபாமா சொல்றாரு இரும்பு புடி ஆட்சி ஆளர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்று சொல்றாரு அது யாருக்கு என்று தெரிகிறதா?
  ஈரானுக்கு!

  Reply : 0       0

  ala Saturday, 22 October 2011 11:33 PM

  இரும்பு பிடி ஆட்சியாளர்கள் இருக்கும் வரை அமெரிக்காவின் எந்த செயல்பாடுகளும் நடக்கவில்லை. இப்போது அவர்களின் ஜால்ராக்கள் உள்ளவரை இனிமேல் அந்த நாட்டு மக்களை அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும். நாம் நினைத்தது நிறைவேறியது என்கிற சந்தோசத்தில் சொல்லி உள்ளார்.

  Reply : 0       0

  hameed Sunday, 23 October 2011 08:04 AM

  பாட்டு வாய்த்தால் கிழவியும் பாடுவாள் ....

  Reply : 0       0

  Rinif Sunday, 23 October 2011 12:37 PM

  ஒபமாவின் கூற்று அமெரிக்கவுக்கும் பொருந்தும்.

  Reply : 0       0

  Rinif Sunday, 23 October 2011 12:41 PM

  அமெரிக்கா இப்படி சொல்வது முதல் தடவை அல்ல. குவைத்தை ஈராக் பிடிக்கும் வரைக்கும் சும்மா பார்துக்க் கொண்டு இருந்தது. பின்னர் தான் இரட்சிக்க வந்தது பழைய கதை.

  Reply : 0       0

  ஓட்டமாவடி ஜெமீல் Sunday, 23 October 2011 02:36 PM

  திரு. ஒபாமா அவர்களின் கூற்றில் “ அமெரிக்கப் படை வீரர் ஒருவரைக்கூட தரையில் இறக்காமல் நாம் எமது நோக்கத்தை அடைந்துள்ளோம்” என்ற கூற்றில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றது. 1. தரையில் இறங்கி நேருக்கு நேர் நின்று எங்களால் (அமெரிகாவால் ) யுத்தம் செய்து வெற்றிபெற முடியாது. அவ்வாறு நேரடியாக யுத்தம் செய்தால் ஆப்கான், ஈராக் , வியட்நாம் நாடுகளில் சந்தித்த கடும் உயிரிழப்புக்களைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டிருக்கும். 2. எமது புதிய யுத்த தந்திரம் என்னவென்றால் எமது படை வீரர்களுக்கு சேதமேதும் ஏற்படா.

  Reply : 0       0

  ala Sunday, 23 October 2011 08:16 PM

  அமெரிக்க படைகளை இறக்கி போராட்டம் நடத்திய நாடுகளில் பெரும் இழப்புக்களை சந்தித்த அமெரிக்கா, இந்தமுறை அந்த நாட்டு மக்களையே படைவீரர்களாக பயன் படுத்தி உள்ளது என்பதை நாசூக்காக சொல்லி உள்ளார்.

  Reply : 0       0

  சிறாஜ் Sunday, 23 October 2011 09:04 PM

  இரும்புப்பிடி ஆட்சி என்றால் மன்னன் ஆட்சி, அப்படின்னா அரபு நாடுகளுக்கு மட்டும்தான் இந்த கோடாரி ஒபாமா விட்டிருக்கும் சவால். இந்த நா..... மா.....க்களுக்கு இடம் கொடுத்து இன்னும் என்ன வெல்லாம் கொடுத்திருக்கும் அரபு நாட்டு மடையர்கள் புத்தி இல்லாமல் நடப்பதனை நினைத்தால் ஆத்திரம் வருகிறது.

  Reply : 0       0

  ummpa Saturday, 22 October 2011 03:19 PM

  ஓம் இதனை சொல்லுங்க. எங்க நாட்டிலும் இந்த நிலைமைதான். உங்களின் இரட்டை வேடத்தின் அத்தியாயம் எப்ப முடிவுக்குவரும். அப்போதுதான் நாங்களும் சந்தோசமாக வாழமுடியும்!

  Reply : 0       0

  meenavan Saturday, 22 October 2011 07:07 PM

  ஒபாமா அவர்களே? சவூதி அரபியாவுக்குமா எச்சரிக்கை அவர்கள் தான் உங்களின் தாளத்திற்கு நர்த்தனம் ஆடுகிறார்களே?

  Reply : 0       0

  amnaheeb Saturday, 22 October 2011 07:20 PM

  உலகுக்கு இருவரும் எதிரிகளாகவும் திரைமறைவில் கைகோர்த்தும்கொண்டனர். ஒருவர் மறைந்துவிட்டார், மற்றவர் MORAL OF STORY சொல்கிறார். நாம் இவர்களுக்கு சிறந்த நடிகர்கள் என்று AWARD கொடுத்துவிட்டு காலத்தின் பதிலுக்காக காத்திருப்போம்.

  Reply : 0       0

  Mohammed Hiraz Saturday, 22 October 2011 07:22 PM

  எது எப்படியோ உங்களுக்கும் ஒரு நாள் முடிவுகாலம் வரத்தான் போகிறது. நீங்கள் மட்டும் என்ன மரணத்தை கடந்தா வாழமுடியும் ஒபாமா? நிச்சயமாக அடுத்த நூற்றாண்டில் இன்றைய நாள் நீங்களும் மண்ணோடு மண்ணாகத்தான் இருப்பீர்கள்???

  Reply : 0       0

  mihwar Saturday, 22 October 2011 07:55 PM

  இரும்புப் பிடி ஆட்சியாளர்கள் இருக்கும் வரையில் அந்த நாட்டின் வளமும் இஸ்லாமும் பேணப் பட்டுள்ளது.எப்போது நீங்கள் கால் வைத்தீர்களோ அப்போதே அல்லாஹ்வின் சோதனை அதிகரிக்கின்றது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--