2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கடாபியின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. அமெரிக்கா வலியுறுத்தல்

Super User   / 2011 ஒக்டோபர் 22 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவின் முன்னாள்  அதிபர் கேணல் கடாபி இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

ஐ.நா. மற்றும் அமெரிக்காவும் கடாபின் இறுதித்தருணம் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேணல் கடாபி, லிபியாவின் தேசிய இடைக்கால அரசாங்கப் படைகளினால் கடந்த வியாழனன்று கொல்லப்படுவதற்கு முன், அப்படையினரின் பிடியில் உயிருடன் இருக்கும் காட்சிகள் அடங்கிய காட்சிகள் செல்லிடத் தொலைபேசி கமெரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் ஒளிரப்பானது. இதையடுத்தே அவரின் மரணம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

 கடாபியின் மரணம் இடம்பெற்ற விதம் பல கேள்விகளை எழுப்புகிறது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையும் இதேபோன்ற கருத்தை தெரிவித்துள்ளார். கடாபியின் மரணம் சட்டவிரோதமானதாக இருக்கலாம் என நவநீதம் பிள்ளையின் பேச்சாளர் ரூபர்ட் கொல்விலே பிபிசியிடம் கூறியுள்ளார்.

நவநீதம் பிள்ளையின் பேச்சாளர் ரூபர்ட் கொல்விலே இது தொடர்பாக பிபிசியிடம் கூறுகையில், "இரு வீடியோபதிவுகள் உள்ளன. ஒன்று அவர் உயிருடன் இருப்பதை காட்டுகிறது. மற்றொன்று அவர் இறந்துள்ளதை காட்டுகிறது. இவ்விரு செல்லிட தொலைபேசி வீடியோக்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக 4-5 வெவ்வேறு வகையான தகவல்கள் உள்ளன. இது வெளிப்படையாக மிக மிக பாரிய கரிசனையாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

கடாபியின் மரணம் அறிவிக்கப்பட்டதையடுத்து லிபிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்காவும், கடாபியின் மரணம் குறித்த முழுமையான விபரங்களை சமர்ப்பிக்குமாறு லிபிய இடைக்கால அரசாங்கத் தலைவர்களை இப்போது கோரியுள்ளது.

வாஷிங்டன் நகரில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மார்க் டோனர் இது தொடர்பாக கூறுகையில், "கடாபியின் மரணித்த சூழ்நிலை மற்றும் சரியான காரணம் என்பவற்றை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை தேசிய இடைக்கால கவுன்ஸில் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. அதை வெளிப்படையான, பகிரங்கமான முறை மேற்கொள்ளுமாறு நாம் வலியுறுத்தியுள்ளோம்" என்றார் .

கடாபியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இம்மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
 


  Comments - 0

 • Akkaraipattu Sunday, 23 October 2011 06:56 AM

  அது சரி... ... உங்கட கமெடிக்கி அளவே இல்ல... போங்க சார்....சும்மா உல்டா உடாம ........

  Reply : 0       0

  hameed Sunday, 23 October 2011 07:44 AM

  இடைக்கால அரசாங்கத்தை தனது பிடியில் கொண்டுவர மிண்டும் ஒரு சதிதிடம் ...

  Reply : 0       0

  meenavan Sunday, 23 October 2011 03:04 PM

  அமெரிக்க இரட்டை வேடத்தின் மற்றுமொரு பிம்பம். கிளர்ச்சி படைகளுக்கு உதவிசெய்வதாக கூறி பல நூறு லிபிய பொதுமக்களை கொன்ற கூட்டு படைகளுக்கு எதிராக (அமெரிக்க படை வீரர்கள் உட்பட)பேசாது நியா படுத்தியோர் கடாபியின் கொலையில் விசாரணை வேண்டுமென்பது,இடைக்கால அரசை நெருக்குதலுக்கு ஆளாக்கி,பெற்றோலிய பகல் கொள்ளையை தாம் விரும்பிய மாதிரி செய்வதற்க்கான முயற்சியே கடாபி கொலை விசாரணையாகும். உலக போலிஸ்காரனே கால சக்கர சுழற்ச்சியில் நீங்களும் செய்வதன் விளைவுகளை அனுபவிப்பீர்கள்.அதனால் பாதிப்புக்கு உள்ளாவது அப்பாவிகளே?

  Reply : 0       0

  சிறாஜ் Sunday, 23 October 2011 08:56 PM

  பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுற இப்படித்தான்
  கோமாளிகள்தானே ஏனைய நாட்டவர்கள். அதுதான் அமெரிக்கா என்னும் ஆமரிக்கா இன்று கடாபியை கொலை செய்து விட்டு விசாரிக்க போகிறார்களாம்..................
  இதுக்கு நல்ல பதில் சொல்லனும் ஆனால் தமிழ் மிரர் அதுக்கு இடம் தராது என்பதனால் விட்டிடலாம்.

  Reply : 0       0

  jampavan Sunday, 23 October 2011 09:51 PM

  வைச்சாண்டா ஆப்பு இடைக்கால அரசுக்கு ........ சோழியன் குடும்பி சும்மா ஆடுமா ?................கீதோபதேசம் ஓதப்போவது ஒபாமா ..... கேட்பார்களா புரட்சிபடையும், இடைக்கால அரசும்.

  Reply : 0       0

  Muna Sunday, 23 October 2011 11:20 PM

  அமெரிக்க அரக்கனின் மற்றுமொரு காய் நகர்த்தல். லிபியப் புரட்சியாளர்கள் சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதைதான்.

  Reply : 0       0

  zamroodh Monday, 24 October 2011 04:21 AM

  இப்ப புரியுது, கடாபியும் உன்னோட கை பொம்மையோ??!!

  Reply : 0       0

  MIFLAN Tuesday, 25 October 2011 02:02 AM

  என்னதான் நடக்குதோ தெரியல...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X