Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 15 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருந்த பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி குளோரியா அரோயோ மணிலா விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
64 வயதான குளோரியா அரோயோ தான் எலும்பு தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். எனினும் அவர் வெளிநாடு செல்வதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தடைவிதித்தது.
ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்நோக்கும் அரோயோ வெளிநாடு சென்றால் திரும்பி வரமாட்டார் என அரசாங்கம் கருதுகிறது.
எனினும் இத்தடை சட்டவிரோதமான என பிலிப்பைன்ஸ் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது.
அதையடுத்து அரோயோ அம்புலன்ஸ் வாகனம் மூலம் தலைநகர் மணிலாவிலுள்ள சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தார். சக்கரநாற்காலியொன்றின் மூலம் விமானத்தில் ஏறுவதற்காக அவர் சென்றுகொண்டிருந்தபோது அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
குளோரியோ அரோயோவும் அவரின் கணவரும் சிங்கப்பூருக்குச் சென்று பின்னர் ஸ்பெய்னுக்குச் செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடம் 3 தடவை குளோரியோவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் லைலா டி லீமா கூறினார்.
ஜனாதிபதியின் பேச்சாளர் எட்வின் ரெமோன் லாசீர்டா இது தொடர்பாக கூறுகையில், "அரோயோ கௌரவமாக சிகிச்சையளிக்கப்படுவார். ஆனால் அவரை நாட்டைவிட்டுச் செல்ல அனுமதிப்பதில்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.இவை அனைத்தும் நாடகம். அவர்கள் மக்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள்" என்றார்.
அதேவேளை, குளோரியோ அரோயோ மீது எவ்வித குற்றச்சாட்டு சுமத்தப்படாததால் அவர் வெளிநாடு செல்வதை தடுப்பது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் 8-5 வகிதத்தில் தீர்ப்பளித்ததாக நீதிமன்ற பேச்சாளர் மிடாஸ் மார்கஸ் கூறினார்.
48 minute ago
57 minute ago
2 hours ago
chelvin Wednesday, 16 November 2011 11:29 AM
அரசியல் நாடகம்..! மக்களின் செல்வத்தை சூறையாடினவர்கள் எங்கு ஓடினாலும் மனசாட்சி விடாது.எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கத்தான் செய்கிறது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
2 hours ago