2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

மியன்மாரில் பூமியதிர்ச்சி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணியளவில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவில் 6.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 

இப்பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுவதுடன், மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

மியன்மாரில்  மண்டலே பகுதியின் வடக்கிலேயே இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இந்த பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.

மியன்மாரில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி அருகில் உள்ள நாடான தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக்கிலும் உணரப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

  Comments - 0

  • Ikram Monday, 19 November 2012 03:34 PM

    இது அல்லாவின் சோதனையே. முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களுக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட தண்டனையே இது. அல்ஹ்ம்துலில்லாஹ். அவன் யாவும் அறிந்தவனே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .