2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குரான் எரிப்பு வழக்கு பாக். உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் குரானின் சில பக்கங்களை எரித்ததாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மீது சுமத்தப்பட்ட மதநிந்தனை வழக்கை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட இந்தப் பெண் அப்பாவி எனவும் இந்த வழக்கு சட்டத்தின் துஷ்பிரயோகம் எனவும்  அவரது சட்டவுரைஞர் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குகொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

முஸ்லிம் மதகுரு ஒருவர் கடந்த ஓகஸ்ட்; மாதம் முன்வைத்த இந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சிறுமி கைதுசெய்யப்பட்டார். இருப்பினும் இந்த மதகுரு போலி சாட்சியங்களை தயாரித்தார் என்று இவர் மீது வழக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்ட இந்தச் சிறுமியை விடுதலை செய்யுமாறு உலகெங்கிலுமுள்ள பல அமைப்புகள் வலியுறுத்திவந்தன.   இந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தலைமறைவாகிய நிலையில் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X