2021 ஜனவரி 27, புதன்கிழமை

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 21 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியாக அஜ்மல் கசாப் இன்று புதன்கிழமை 7.30 மணிக்கு ஏர்வாடா  சிறைச்சாலையில் வைத்து தூக்கிலிடப்பட்டார்.

கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தியை அடுத்து மும்பை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் உட்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் கசாபுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து கசாப் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அரம்பத்தில் அவரது மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம், அண்மையில் அந்த மரண தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து ஜனாதிபதியிடம் கருணை மனுவொன்று கையளிக்கப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டதையடுத்து கசாப் இன்று காலை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

இதேவேளை, கசாப்பைத் தூக்கிலிடப்போவது குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது. இருப்பினும், அவரது உடலை வாங்க பாகிஸ்தான் மறுத்துவிட்ட நிலையில், கசாப்பின் உடல் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

கசாப் தூக்கிலிடப்பட்ட விவகாரத்தில் ரகசியம் பேணப்பட்டது. இதுபோன்ற முக்கிய சம்பவங்களில் ரகசியம் பேணப்படுவதில் தவறில்லை. அது நியாயமான ஒன்றுதான்' என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (தற்ஸ்தமிழ்)

  Comments - 0

 • meenavan Wednesday, 21 November 2012 05:18 AM

  குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் உண்மை. ஆனால் கஷ்மீரில் நிகழும் படுகொலைகள், ஆப்கான், ஈராக், காசா சிறுவர்கள்,பெண்கள் கொல்லபடுவதர்க்கு யாருக்கு தண்டனை வழங்கலாம்...?

  Reply : 0       0

  குமார் Wednesday, 21 November 2012 12:20 PM

  கஷ்மீரில், ஆப்கான் நடந்த படுகொலைகளுக்கு நியாயம் வேண்டும் ஆனால் இங்கு இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு விசாரணை நடத்த கூடாது என ஊர்வலம் போவீர்கள். வாழ்க உங்கள் மனிதாபிமானம்.

  Reply : 0       0

  mufeeiz Wednesday, 21 November 2012 06:41 PM

  aduthe thuku thandenei rajivkanthi kolei valeku kutrewalika?

  Reply : 0       0

  jeevseh Thursday, 22 November 2012 02:07 AM

  குமார் நெத்தியடியான விமர்சனம்........சரியாக சொன்னீங்ங‌

  Reply : 0       0

  xlntgson Friday, 23 November 2012 05:34 AM

  # Kumar! Rajiv murder conspirators are not executed, while a potent suicide killer turned an approver was hanged. The religious bias is there!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .