2021 மே 12, புதன்கிழமை

பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது தாக்குல்; எண்மர் பலி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 8 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு பலியானவர்களில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவரும் தாக்குதல் தாரிகள் இருவரும் மற்றும் அருகில் காணப்பட்ட பள்ளிவாசலில் இருந்த பொதுமக்கள் மூவரும் அடங்குவதாக அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியின் நகர் எல்லையில் உள்ள பானுவுக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீதே இன்று திங்கட்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தெளிவாகத் தெரியவில்லை. இந்த பொலிஸ் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கிரேனைட்டுக்கள் மற்றும் துப்பாக்கி தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாங்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பாகிஸ்தான் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் தலைவர் பஃதுல்லா மெஹுஸ்ட்னின் உறவினரின் மரணத்துக்கு பழிவாங்குவதற்காக இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .