2021 ஜனவரி 20, புதன்கிழமை

ஹுகோ சாவேஷ் புதிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

புற்றுநோய்க்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் தற்போது புதிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஷ் நான்காவது தடவையாகவும் புற்றுநோய்க்குரிய சத்திரசிகிச்சையை இம்மாதம் 11ஆம் திகதி கியூபாவில் மேற்கொண்டார். ஆனால் தற்போது அவர் சுவாச நோயால் அவதிப்படுவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெனிசூலா நாட்டு ஜனாதிபதியாக 1999ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஹுகோ சாவேஷ், ஜனவரி மாதத்திலிருந்து இன்னும் 6 வருடங்களுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .