2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

விமானத் தாக்குதலில் பாகிஸ்தான் கிளர்ச்சி தலைவர் முல்லாஹ் நஷீர் பலி

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட ஆளில்லா விமானத்  தாக்குதலில் பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்களின் சிரேஷ்ட தலைவர் முல்லாஹ் நஷீர் கொல்லப்பட்டுள்ளார்.

தெற்கு வஷிரிஸ்தானின் வட – மேற்கு பழங்குடி மாவட்டத்திலேயே இன்று வியாழக்கிழமை இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு எறிகணைத் தாக்குதல்களில்  இவருடன் ஏனைய 5 போராளிகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது இவ்வாறிருக்க, நவம்பர் மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலொன்றில் முல்லாஹ் நஷீர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Kamalraj Sunday, 06 January 2013 03:16 AM

    பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஷ்தானுக்கு இது தேவைதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .