2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏவ்.பி செய்தி சேவை முகவரமைப்பின் பெண் ஊடகவியலாளரான அஞ்சா நைட்ரிங்கஸ் (வயது 48)  ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவருடன் இருந்த சக ஊடகவியலாளரான கேற்றி கேன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் எனும் இடத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம்  இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தினை  மேற்கொண்டுள்ளார்.

அஞ்சா மற்றும் கேத்தி இருவரும் ஏ.ஏவ்.பி செய்தி சேவை நிறுவனத்திற்காக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்ததுடன் அவர்கள் இருவரும் இணைந்து பல வருடங்களாக ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்துவரும் இன மோதல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை(05) நடைபெறவுள்ள நிலையில் அங்கு தலிபான் தீவிரவாத அமைப்பினரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .