2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சார்ள்ஸின் மைத்துனர் காலமானார்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸின் மனைவியான கமிலாவினுடைய  சகோதரர் மார்க் ஷான்ட் (வயது 62) என்பவர் நியூயோர்க்கில் தடுக்கி விழுந்ததால், தலையில் படுகாயமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக   வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் தர்மஸ்தாபன வேலை தொடர்பாக நியூயோர்க் சென்றிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளானார்.

செவ்வாய்க்கிழமை (22) இரவு விழுந்து காயமடைந்த இவர்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமிலாவின் லண்டன் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான கிளாறன்ஸ் ஹவுஸ் தெரிவித்துள்ளது.

மார்க் ஷான்ட் மிகுந்த உற்சாகத்துடன் செயற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். கமிலாவும் அவரது கணவரான இளவரசர் சார்ள்ஸும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களும் இவரது திடீர் மரணம் காரணமாக துயரடைந்துள்ளதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 'ஷாண்ட யானை பாதுகாப்பு தர்மஸ்தாபனத்தின் தலைவராக இருந்தார். அவர் பயணக் கட்டுரையாளராகவும் சுற்றுச்சூழல் பேணுநர் என்ற வகையிலும் பிரபலமாக இருந்தார்.

இவர் 'யானைக் கதைகள்', பிரமபுத்திர வழியே பயணம் என்பவை உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--