2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கான் தற்கொலைத் தாக்குதலில் ஐவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இன்று புதன்கிழமை காலை இராணுவ பேருந்து ஒன்றின் மீது  தற்கொலைதாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 05 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூல் பல்கலைக்கழகத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கடந்த மாதம் தலைநகரில் ஜனாதிபதி வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவின்  பேரணியின் மீது   மேற்கொள்ளப்பட்டிருந்த  தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அவர் தப்பியிருந்தார். இதன்போது அறுவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .