2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது

Janu   / 2026 மார்ச் 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் ஒரு கோடியே பதினாறு இலட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்து அறுநூறு (1,16,72,600) ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்து வகைகள் மற்றும் வாசனைத் திரவியங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் "கிரீன் சேனல்" (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற ஐவர் திங்கட்கிழமை (23) அன்று கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மற்றும் மகரகம பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இலங்கை வர்த்தகர்களும், ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சீன வர்த்தகர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் திங்கட்கிழமை (23)  அதிகாலை ஹொங்கொங்கில் இருந்து 'கதே பசிபிக்' (Cathay Pacific) விமான சேவைக்கு சொந்தமான CX-611 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட "மென்செஸ்டர்" வகை 352 கார்ட்டூன்கள் மற்றும் 03 பாக்கெட்டுகளில் இருந்த 70,460 சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்து பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .