2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

ஸம்பிய ஜனாதிபதி காலமானார்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸம்பிய ஜனாதிபதி மைக்கேல் சட்டா தனது 77ஆவது வயதில் பிரித்தானியாவில் காலமாகியுள்ளார். வெளியில் கூறப்படாத நோய்க்கு இவர்  பிரித்தானியாவில்  சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு காலமாகியதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் பிரித்தானியாவிலுள்ள ஏழாவது கிங் எட்வேர்ட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், யார் ஜனாதிபதிப் பதவியை பொறுப்பேற்கவுள்ளார் என்பது தொடர்பில் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பில் ஸம்பிய அமைச்சரவை இன்று புதன்கிழமை ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களாக ஆட்சியிலிருந்த ரூபியா பண்டாவின் கட்சியைத் தோற்கடித்து,  இவர் 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  23ஆம் திகதி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

1937ஆம் ஆண்டு ஜுலை மாதம் 06ஆம் திகதி பிறந்த இவர், ஸம்பியாவின் 05ஆவது ஜனாதிபதி ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .