Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையிலான முரண்பாடுகளைக் குறைக்கும் முகமாக, தென்கொரிய முன்னாள் முதற்பெண்மணி லீ ஹீ-ஹோ, வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
'70 வருடகால கொரியப் பிரிவு காரணமாக ஏற்பட்ட வலியிலிருந்தும் காயங்களிலிருந்தும், இரண்டு கொரியாக்களும் குணமாக முடியுமெனவும், நல்லிணக்கத்தையும் இணைந்து செயற்படுதலையும் ஊக்குவிக்க முடியுமெனவும் லீ நம்பிக்கை வெளியிட்டார்' என, லீ ஹீ-ஹோ-வின் விஜயத்தை ஏற்பாடு செய்துள்ள கிம் டா-ஜ§ங் சமாதான நிலையம் தெரிவித்துள்ளது.
அவர் தனிப்பட்ட விஜயமாகவே வடகொரியாவுக்குச் சென்றுள்ள நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உட்பட உயர்மட்ட வடகொரியத் தலைவர்களை அவரால் சந்திக்க முடியுமா என்பது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கு முன்னர், 2000ஆம் ஆண்டும் இரு நாடுகளுக்குமிடையிலான நல்லிணக்கப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த அப்போதைய ஜனாதிபதி டா-ஜ§ங், அதற்காக நொபெல் சமாதானப் பரிசையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026