Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்களின் காரணமாக, 2015 முதற்பாதியில், 5,000 பொதுமக்கள் இறந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபைகள் தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதற்பாதியில் அறிக்கையிடப்பட்ட மரணங்களை விட, இது 1 சதவீதம் அதிகமானதாகும்.
இவ்வாண்டுக்கான தரவுகளில், ஆயுத மோதல்களின் போது, அதிகளவிலான மக்கள் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களில் சிக்கியே மரணமும் காயமும் அடைந்துள்ளனர். எனினும், ஒட்டுமொத்தமான மரணங்களில் பெரும்பாலானாவை தலிபான்களாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மேலும் தெரிவிக்கிறது. ஏற்படுத்தப்பட்ட மரணங்களின் 70 சதவீதத்துக்கு, தலிபான்களே பொறுப்பாக உள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல்கள், வெடிக்க வைக்கும் நவீன உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டே, தலிபான்கள் பொதுமக்களை இலக்கு வைத்துள்ளனர்.
ஏற்படுத்தப்பட்ட மொத்த மரணங்களில், 1,577 மரணங்கள் தரையில் இடம்பெற்ற மோதலின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 12,000 நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் காணப்படுகின்ற போதிலும், ஆப்கானிஸ்தான் படைகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக மாத்திரமே அவர்கள் தங்கியுள்ளனர். அமெரிக்க படையினரில் சிறிய எண்ணிக்கையிலானோர் மாத்திரம், நேரடி மோதல்களில் பங்குபற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago