2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

டெக்ஸாஸில் எண்மர் சுட்டுக் கொலை

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெக்ஸாஸில் உள்ள வீடொன்றில் வைத்து, ஆறு குழந்தைகள், அவர்களின் பெற்றோர் என ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களைச் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் டேவிட் கொன்லி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெவைன் ஜக்ஸன் (50), அவரது மனைவி வலெரி ஜக்ஸன் (40), அவர்களது குழந்தைகளான நேதனியல் (13), டெவைன் (10), ஹொனஸ்டி (11) கலெப் (9), ட்ரினிட்டி (7), ஜோனா (6) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களைச் சுட்டுக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள டேவிட் கொன்லி, சுட்டுக் கொல்லப்பட்ட வலெரி ஜக்ஸனின் முன்னைய உறவொன்றின் மூலம் பிறந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரினதும் கைகளில் விலங்கிடப்பட்டு, அதன் பின்னர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .