2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மகி மீதான தடை நீக்கம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளாவிய ரீதியில் மகி நூடில்ஸ்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கெதிராக மகி நூடில்ஸ்களைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், அந்நிறுவனத்துக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நெஸ்லேயின் கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட போதிலும், மகி நூடில்ஸ்கள் திரும்பவும் சந்தையை எட்டுவதற்கு முன்னர் புதிய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.

மகி நூடில்ஸ்களில் பாதுகாப்பற்ற அளவிலான ஈயம் காணப்படுவதாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட அறிக்கையை அடுத்து, நாடாளாவிய ரீதியில், மகி நூடில்ஸ்கள் வாபஸ் பெறப்பட்டிருந்தன.

மகி நூடில்ஸ்களை மீண்டும் சந்தைகளில் கொண்டுவருவதே எண்ணம் எனக் குறிப்பிட்டுள்ள நெஸ்லே இந்தியாவின் பேச்சாளர், தங்களுடைய சொந்தப் பரிசோதனைகளில், அந்நூடில்ஸ் பாதுகாப்பானதாகக் காணப்படுவதாக அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .