2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சோமாலியாவில் படகு கவிழ்ந்தது; 23 பேரின் சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியா கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடலில் படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தபட்சம் 55 பேர் மூழ்கியுள்ளதாக நம்பப்படுவதாக ஐ.நா. அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது.

வட – கிழக்கு சோமாலியாவின் போஸாஸ்ஸோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகே இவ்வாறு கவிழ்ந்ததாகவும் இப்படகில் அதிகளவான பயணிகள் இருந்ததாலேயே இவ்விபத்து சம்பவித்ததாகவும்; ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்த இப்படகில் சோமாலியப் பிரஜைகளும் எதியோப்பிய பிரஜைகளும் பயணித்ததாக நம்பப்படுகின்றது.

23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏனைய 32 பேரும் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுபவதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .