2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஆப்கானில் 24 மணிநேரத்தில் 11 நேட்டோ படையினர் கொலை

Menaka Mookandi   / 2010 ஜூலை 15 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 11 நேட்டோ படைவீரர்கள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் அமெரிக்காவின் அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆப்கானிஸ்தான், ஹெல்மான்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களிக் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இந்த மாதத்தில் மட்டும் 45 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 33பேர் அமெரிக்கர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தில் மொத்தமாக 100 வெளிநாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் நெருக்கடியான நிலையை எட்டியுள்ளதாக நேட்டோப் படைப்பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் அநேக சந்தர்ப்பங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.


  Comments - 0

  • Razmi Thursday, 15 July 2010 07:31 PM

    ஆப்பிழுத்த குரங்கு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .