2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

லிபியா ஆர்ப்பாட்டங்களில் 24 பேர் பலி

Kogilavani   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவில் அரசாங்கத்தை கண்டித்து இடம்பெற்று வருகின்ற ஆர்ப்பாட்டங்களின் காணமாக 24 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன்,  இராணுவத்தினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு நகரமான பென்காளியில் ஆயிரக்கணக்கானோர் இரவிலும் வீதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல்களில் பலியானவர்கள் சிலரின் மரணச்சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமென அஞ்சப்படுகிறது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--