2020 நவம்பர் 28, சனிக்கிழமை

28 மாடி கட்டிடம் தீக்கிரை ; 42 பேர் பலி

Super User   / 2010 நவம்பர் 15 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள 28 மாடி கட்டிடமொன்று இன்று தீக்கிரையானதால் குறைந்தபட்சம் 42 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. இத்தீயினால் கட்டிடத்தின் பெரும் பகுதி அழிந்துள்ளது.

புனரமைக்கப்பட்டுவந்த இக்கட்டிடம் இன்று பகல் தீப்பற்றத் தொடங்கியதாகவும் அதிலுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற முற்பட்டபோது நெரிசலில் சிக்கி பலர் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிக உயரமான இக்கட்டிடத்தின் தீப்பிழம்புகளை பல கிலோமீற்றர் தொலைவிலிருந்தும் அவதானிக்க முடிந்தது.

குறைந்தபட்சம் 42 பலியாகியுள்ளதாக மாநகர நிர்வாகத்தின் அறிக்கையை மேற்கொள்காட்டி சீன அரசாங்க  செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை எனவும் ஆனால் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடம் ஆசிரியர்களுக்கான குடியிருப்புத் தொகுதியொன்றாகும் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்றவர்களாவர்வர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கட்டிடத்தில் 156 குடும்பங்கள் வசித்தாக ஷாங்காய் மாநகர நிர்வாகம் தெரிவித்தது.

3 ஹெலிகொப்டர்கள், 60 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் என்பன தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  (படங்கள் : ராய்ட்டர்ஸ்)

-
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--