2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மொஸ்கோ விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல் 31 பேர் பலி

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் பிரதான விமான நிலையமான டொமோடெடோவோ விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 31 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது ஒரு தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என ரஷ்ய புலனாய்வு அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

வுpமான நிலையத்தின் சர்வதேச பொதிகள் வரவுப் பிரிவில் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலையடுத்து ரஷ்ய தலைநகரிலும் ஏனைய விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X