2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சீனாவில் பஸ் - கார் மோதல் 35 பேர் பலி

Super User   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குறைந்தபட்சம் 35 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் வடபிராந்தியத்திலுள்ள தியான்ஜின் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பஸ் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக்கொண்டதால் இந்த அனர்தம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி பஸ்ஸில் 55 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் பலர் பெரும்பாலானோர் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் நேற்று வெள்ளிக்கிழமைவரையான ஒரு வார காலத்தில் குறைந்தபட்சம் 56 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வருடத்தில் சீனாவில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 65,000 பேர் பலியானதாகவும் 254,000 பேர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X