2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பர்மாவில் 452 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பர்மாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பர்மாவில் 452 சிறைக்கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளை உள்ளடக்கிய இந்த விடுதலை  இருதரப்பு உறவு மற்றும் நல்லெண்ணத்தை  மேம்படுத்த உதவும் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பர்மிய ஜனாதிபதி தெய்ன் செய்னின் சீர்திருத்த அரசாங்கத்தால் தொடர்ச்சியாக விடுவிக்கப்படும் கைதிகளின் தொகுதிகளில் இது ஆகவும் பிந்தியதாக அமைகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்த விஜயமானது பர்மிய அரசாங்கத்தின் சீர்திருத்தத்தை ஊக்குவிப்பதற்கு உதவும்; என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தருணத்தில் எத்தனை அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்பது தொடர்பில் தெளிவாகத் தெரியவரவில்லை. பர்மிய சிறைச்சாலைகளில் குறைந்தபட்சம் 300 அரசியல் கைதிகள் இருப்பதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் கருதுகின்றன.

கடந்த செப்டெம்பர் மாதம் பொதுமன்னிப்பின் கீழ் சுமார் 500 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் குறைந்தபட்சம் 58 அரசியல் கைதிகள் அடங்கியதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • barakathulla Friday, 16 November 2012 05:41 AM

    அடிக்கடி அமெரிக்க ஜனாதிபதி விஜயம் செய்தால்,அதிகமான கைதிகல் விடுதலை ஆவார்கள் போல!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .