2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கௌதமாலாவில் பூமியதிர்வு; 49 பேர் பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌதமாலாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி  ஒட்டோ பெரஸ் மொலின தெரிவித்துள்ளார்.

கௌதமாலாவின் பசுபிக் கரையோரப்பகுதியில் நேற்று புதன்கிழமை 7.4 ரிச்டர் அளவுகோலில் இப்பூமியதிர்ச்சி பதிவாகியது.

இந்நிலையில், அங்கு அவசர எச்சரிக்கை நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள அந்நாட்டு ஜனாதிபதி, பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உயர்ந்த மாடிக்கட்டிடங்களிலுள்ள மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மண்சரிவுகள் காரணமாக வீதிகள் புதையுண்டுபோயுள்ளன. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் இணைப்புக்களை ஏற்படுத்த இன்னும் 24 மணிநேரம் எடுக்குமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிக்கோ நகரத்திலிருந்து சன்சல்வடோர்வரை கட்டிடங்கள் குலுங்கியதால்  அலுவலகங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் மக்கள் வெளியேறியுள்ளனர். 

73,000 பேர் மின்சாரமின்றி இருப்பதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .